search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்டாக்சி டிரைவர் தற்கொலை"

    கால்டாக்சி டிரைவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டதை போல போலீசார் தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    வேலூரை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜேஷ், கடந்த மாதம் 25-ந்தேதி, மறைமலை நகர் ரெயில் நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ், அதற்கான காரணம் என்ன? என்பதை விவரித்து பேசி இருந்தார்.

    அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த வீடியோவில் சென்னை போலீசே எனது சாவுக்கு காரணம் என்று கூறி இருந்தார்.

    சென்னை திருமங்கலம் பகுதியில் சாலையோரமாக காரை நிறுத்தி இருந்த போது, போலீசார் வந்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு சென்னை இணை கமி‌ஷனர் விஜயகுமாரிக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    இதன்படி இணை கமி‌ஷனர் விஜயகுமார் தீவிரமாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில் போலீசார், கால்டாக்சி டிரைவர் ராஜேசிடம், நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தக்கூடாது என்று மட்டுமே அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    வீடியோவில் டிரைவர் ராஜேஷ் குறிப்பிட்டதை போல தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #tamilnews
    கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் தற்கொலை தொடர்பாக போலீசாரை தரக்குறைவாக பேசி இணையதளத்தில் வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் (வயது 25) என்பவர் கடந்த 25-ந்தேதி சென்னையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக திட்டியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று ராஜேஷ் வீடியோ பதிவு செய்திருந்தார். இது இணையதளத்தில் பரவியது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இணைய தளத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பேசிய ஒரு வாலிபர் ராஜேஷ் தற்கொலை தொடர்பாகவும் போலீசாரை தரக்குறைவாகவும் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பாரபத்தி தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் செந்தில் (23) என்பவர்தான் போலீசாரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். இவர் கார் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    கால்டாக்சி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ, வேன் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    காஞ்சீபுரம் அருகே கால் டாக்சி டிரைவர் ராஜேஷ் என்பவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் தன்னை போக்குவரத்து போலீசார் திட்டியதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அதேபோல் தமிழகம் முழுவதும் வாடகை கார் ஓட்டும் டிரைவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு வருகிறார்கள் எனவே இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கார், வேன், ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி விழுப்புரத்திலும் வாடகை கார், ஆட்டோ, வேன் ஓட்டுபவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, விழுப்புரம் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ, கார் மற்றும் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பழைய பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 

    இதேபோல் தியாகதுருகத்தில் நேரு கார் ஓட்டுநர்கள் சங்கம், பகவத்சிங் ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்சங்கம், அம்பேத்கர் டெம்போ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அண்ணா மினி டெம்போ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும் வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னசேலத்திலும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 
    ×